பிரபல நடன இயக்குநர் சரோஜ்கான் மாரடைப்பால் மறைவு - 3 முறை தேசிய விருது பெற்ற பெருமைக்குரிய சரோஜ்கான்
பதிவு : ஜூலை 03, 2020, 11:33 AM
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் சரோஜ்கான் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71.
கடந்த 20 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் சரோஜ்கான், மும்பையில் உள்ள குருநானக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் கொரோனா இல்லை என்றும், எப்போதும் ஏற்படும் மூச்சுத் திணறல் தான் என, மருத்துவமனை நிர்வாகம் கூறி, அதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது மறைவுக்கு, முக்கிய பிரமுகர்கர்களும், திரையுலக பிரபலங்களும் இணையதளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமாத்துறையில், நடன பயிற்சியாளராக கோலோச்சி வந்த சரோஜ்கான், இந்தி திரைப்படங்களான தேவதாஸ், ஜப் வீ மெட் மற்றும் தமிழ் திரைப்படமான சிருங்காரம் ஆகியவற்றிற்கு,  3 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் நடன பயிற்சி அளித்த பாடல்களில், ஏக் தோ தீன், டோலா ரே, உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

302 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

283 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

102 views

பிற செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து - காயம் அடைந்தவர்களை காரில் அழைத்து சென்ற உள்ளூர் மக்கள்

கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்பு பணிகள் எப்படி நடைபெற்றன என்பது பற்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

26 views

ரத்த தானம் கொடுக்க திரண்ட மக்கள் - நெகிழ்ச்சியுடன் பகிரப்படும் புகைப்படம்

கோழிக்கோட்டில் விமான விபத்து ஏற்பட்ட போது படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

31 views

சர்ச்சை ஓவியம் வெளியிட்ட விவகாரம் - காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண்

சர்ச்சை ஓவியம் வெளியிட்ட விவகாரத்தில் , தனது முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து ரெஹானா பாத்திமா போலீசில் சரணடைந்தார்.

468 views

கோழிக்கோடு விமான விபத்து - ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்து கடிதம்

கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

17 views

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 12 ஆயிரத்து 822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து மூன்றராயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

5 views

ஆக.15-ல் சுதந்திர தினம் கொண்டாட்டம் - செங்கோட்டையில் இசை மீட்டும் நிகழ்ச்சி

வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்திய ராணுவம் சார்பில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இசை மீட்டும் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.