நடிகை ஷம்னா காசிமிடம் பணம் கேட்டு மிரட்டல் - நான்கு பேரை கைது செய்தது காவல்துறை

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஷம்னா காசிமிடம் பணம் கேட்டு மிரட்டியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
நடிகை ஷம்னா காசிமிடம் பணம் கேட்டு மிரட்டல் - நான்கு பேரை கைது செய்தது காவல்துறை
x
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஷம்னா காசிமிடம் பணம் கேட்டு மிரட்டியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.  "அடங்க மறு", " ஆடு புலி" உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும்  மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்தவர் கேரளாவைச் சேர்ந்த ஷம்னா காசிம்.   திருமண தரகர்கள் எனக்கூறி திருச்சூரை சேர்ந்த அஷ்ரப், ரமேஷ், ரபீக், சரத் ஆகிய நான்கு பேர், இவரது பெற்றோரை சந்தித்து பேசிய போது, ஒரு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம்  தரவில்லை என்றால் எதிர்காலத்தை பாழாக்கி விடுவோம் எனவும் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து,4 பேரை கொச்சி மரடு போலீசார் கைது செய்தனர். கோழிக்கோட்டை சேர்ந்த மூவரை தேடி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்