இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்...எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் வரிகள்...

கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், கொரோனாவால் உலகமே உறைந்து போயிருக்கும், இந்த நேரத்தில் அவரது வரிகள் நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது.
இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்...எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் வரிகள்...
x
1927-ஆம் ஆண்டு ஜுன் 24ந் தேதி,  8 வது பிள்ளையாக பிறந்து தத்து பிள்ளையாக வளர்ந்து, தமிழர் நெஞ்சங்களில் தனது பாடல்வழி நீக்கமற நிறைந்த கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. எந்தக் காலத்துக்கும் கண்ணதாசன் வரிகள் பொருந்தும் என்பது எல்லோரும் அறிந்ததே. கொரோனா காலத்துக்கும் அவரின் வரிகள் அப்படியே பொருந்திப் போகின்றன. 

உலகை உறைய வைத்த வாழ்க்கையில் இருந்து மீள்வதற்கு மன தைரியம் கொடுக்கிறது அவரது இந்த வரிகள்...ஊரடங்கில் வேலை இழந்து பொருளாதார ரீதியில் இடிந்து போயிருக்கும் உள்ளங்களில் ஊடுருவி உற்சாக மூட்டும் இந்த வரிகளை எழுதியிருக்கிறார் கண்ணதாசன். எதற்கும் மருத்துவம் உள்ள இந்த நூற்றாண்டில் கொரோனாவுக்கு இன்னும் மருந்தில்லை என்பதைக் கூட கண்ணதாசன் வரிகளில் பொருத்திப் பார்க்க முடிகிறது. 

அனைத்தும் நானே, என்னை மீறிய ஒன்று இல்லை என இயற்கை சொல்வதாக, முக்காலமும் உணர்ந்த கவிஞர் கண்ணதாசனின் இந்த வரிகளை எடுத்துக் கொள்ள தோன்றுகிறது. நமக்கு மட்டும் அல்ல, உலகத்துக்கே இதுதான் நிலைமை என்பதே நிதர்சனம். எத்தனை இடர்வந்த போதிலும், நம் கையில் ஒன்றுமில்லை என்றும், இது மாறும் என்றும் கண்ணதாசனின் இந்த பாடல் ஆறுதல் களிம்பு பூசுகிறது. கொரோனா ஊரடங்கு முழுமையாக விலகும் நிலையில், நண்பர்கள் மற்றும்  உறவுகளை சந்திக்கும் நாம் இப்படித்தான் கேட்போமோ, என்னவோ? நாம் கண்ணதாசனை பல கோணங்களில் பார்த்தாலும், தான் யார் என்பதை அவரே தோன்றி பாடலாகப் பதிவு செய்திருக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்