நடிகை வனிதாவிற்கு வரும் 27-ம் தேதி திருமணம்

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.
நடிகை வனிதாவிற்கு வரும் 27-ம் தேதி திருமணம்
x
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நடிகை வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 
கடந்த  சில ஆண்டுகளாக, வாழ்க்கையில் பல கஷ்ட நஷ்டங்களை பார்த்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட 4 மாத ஊரடங்கு, பல விஷங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கைக்கு சரியான மனிதரை தேர்ந்தெடுப்பது ஒரு கனவாக இருக்கும் என்று கூறியுள்ள வனிதா, தற்போது தனக்கு அந்த கனவு நினைவாகி இருப்பதாக கூறியுள்ளார். அதன் படி சினிமா தொழில் நுட்ப கலைஞர், பீட்டர் பால் என்பவரை தேர்ந்தெடுத்து , அரசின் அனுமதி பெற்று முறைப்படி வரும் 27-ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்