'காட் மேன்' இணைய தொடர் சர்ச்சை : இயக்குநர், தயாரிப்பாளர் ஆஜராக சைபர் கிரைம் போலீஸ் சம்மன்

சர்ச்சையில் சிக்கியுள்ள காட்மேன் இணையதள தொடர் இயக்குனர், தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சைபர் கிரைம் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
காட் மேன் இணைய தொடர் சர்ச்சை : இயக்குநர், தயாரிப்பாளர் ஆஜராக சைபர் கிரைம் போலீஸ் சம்மன்
x
நடிகர்கள் டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ் நடித்துள்ள இணைய தள தொடர் காட்மேன். இந்த தொடர் வெளியாவதற்கு முன்பே முன்னோட்ட காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரை கொச்சைப்படுத்துவதாக கொடுக்கப்பட்ட புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் ஜூன் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் விசாரணைக்கு வராததால் காட்மேன் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2-வது சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் 6-ம்தேதி காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்