சல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - 'பாய் பாய்' என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி

பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம்.
சல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - பாய் பாய் என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி
x
பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக எந்தப் படமும் வெளியாகவில்லை. இதற்குப் பதிலாக அவரது ரசிகர்களுக்காக 'பாய் பாய்' (Bye,Bye ) என்ற பாடலை அவர் வெளியிட்டு உள்ளார். இந்தப்  பாடலை  சல்மான் கானே பாடி நடித்தும் உள்ளார். அதில், "தனது அற்புதமான ரசிகர்களுக்காக சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளேன் என்றும், 'பாய் பாய் என்ற இந்த பாடல் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் கொண்டாடும் ஒரு பாடல்", என்றும் சல்மான் கான் தெரிவித்துள்ளார். இந்தப்பாடல் யூ டியூப்பில் டிரண்டிங் ஆகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்