பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட 100 பேரின் நிலை என்ன?

பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட 100 பேரின் நிலை என்ன? என்ற அச்சம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட 100 பேரின் நிலை என்ன?
x
பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட 100 பேரின் நிலை என்ன? என்ற அச்சம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதில் ஒரு எம்.பி.யும் அடங்குவார். அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் பரபரப்பு கூடியிருக்கிறது. பிரபல பாடகியான கனிகா கபூர் லண்டனுக்கு சென்று விட்டு கடந்த 15ஆம் தேதி லக்னோவுக்கு திரும்பியிருக்கிறார். ஆனால் விமான நிலையத்தில் நடந்த கொரோனா சோதனையில் இருந்து தப்பியிருக்கிறார். இதனிடையே தன் நண்பர்கள், உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு லக்னோவில் விருந்து கொடுத்திருக்கிறார் கனிகா. இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்தும் பங்கேற்று இருக்கிறார். 

இதன்பிறகு துஷ்யந்த் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். வசுந்தரா ராஜேவும் அன்றாட பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் கனிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் அனைவருமே அதிர்ந்து  போயிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் கனிகா லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அளித்த பார்ட்டிக்கு சென்றவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட வசுந்தரா ராஜே, தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை ட்விட்டரில் அவர் உறுதி செய்துள்ளார். 

அதேநேரம் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்ற கூட்டத்தில் துஷ்யந்த் உடன் இருந்தவர்களின் நிலை என்ன? பார்ட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களின் நிலை என்ன? என்ற கேள்வியால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை துஷ்யந்த் சந்தித்ததும், கைகுலுக்கிய படங்களும் வெளியான நிலையில் கொரோனா அச்சம் மேலும் வலுத்துள்ளது. மேலும் கனிகா கபூர் லக்னோவில் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் நிலையில் இப்போது அங்கு வசிப்பவர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கூறி வரும் நிலையில் பிரபல பாடகி அளித்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களின் நிலை பல கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது. கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள் பலரும் இப்போது சிக்கலில் 


Next Story

மேலும் செய்திகள்