இந்தியன்- 2 விபத்து விவகாரம் : "நடிக்கச் சொல்லி காவல்துறை துன்புறுத்துகிறது" - கமல்ஹாசன்
பதிவு : மார்ச் 17, 2020, 05:30 PM
இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்து நடந்த இடத்தில், விசாரணைக்காக கமல்ஹாசன் நேரில் செல்ல தேவையில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், படப்பிடிப்பு நடந்த ஈவிபி பிலிம் சிட்டிக்கு நேரில் வந்து, விபத்து குறித்து நடித்துக் காட்டுமாறு கமல்ஹாசனுக்கு, போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன், போலீசார் தம்மை  துன்புறுத்துவதாகவும், கிரேனை தாம் இயக்கவில்லை என்றும் தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட தம்மை, மீண்டும் அங்கே அழைத்து விபத்தை நடித்துக் காட்டச் சொல்வதாகவும் ஏற்கனவே 3 மணி நேரம் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறினார்.  ஆனால், கதாநாயகன் என்பதற்காக  கமலுக்கு விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்த காவல்துறை, விபத்தை பார்த்த அனைவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறியது. இருதரப்பு வாதத்தை கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், கமல்ஹாசன் நேரில் செல்ல வேண்டாம் எனவும் தேவைப்பட்டால், குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமலிடம் விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டது. 

 இந்தியன் 2- இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராக உத்தரவு

இதனிடையே, இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக இயக்குனர் சங்கர் உள்ளிட்ட 23 பேர் விபத்து நடந்த இடத்தில் நாளை ஆஜராக வேண்டும் என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விபத்து நடந்த ஈவிபி பிலிம் சிட்டியில், நாளை காலை10 மணிக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.