குறித்த நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்புக்கு வரும் சிம்பு - மகிழ்ச்சியில் "மாநாடு" படக்குழு

குறித்த நேரத்திற்கு முன்பாகவே நடிகர் சிம்பு படப்பிடிப்பிற்கு வருவதாக மாநாடு படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குறித்த நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்புக்கு வரும் சிம்பு - மகிழ்ச்சியில் மாநாடு படக்குழு
x
குறித்த நேரத்திற்கு முன்பாகவே நடிகர் சிம்பு படப்பிடிப்பிற்கு வருவதாக மாநாடு படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் 'மாநாடு '  படப்பிடிப்பு, சென்னை அருகே நடைபெற்று வருகிறது. தற்போது யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக படப்பிடிப்புகளில், நடிகர் சிம்பு தாமதமாக வருவார் என குற்றச்சாட்டு நிலவி வந்த நிலையில், தற்போது குறித்த நேரத்திற்கு முன்னதாகவே படப்பிடிப்பிற்கு வருவதாகவும், இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்