நடிகையின் செல்போன் எண் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் பதிவு

நடிகையின் செல்போன் எண்ணை ஆபாச வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்ட பீட்சா டெலிவரி பாய் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நடிகையின் செல்போன் எண் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் பதிவு
x
நடிகையின் செல்போன் எண்ணை ஆபாச வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்ட பீட்சா டெலிவரி பாய் உள்ளிட்ட 3 பேரை போலீசார்  தேடி வருகின்றனர். தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி ராவ் . அவருக்கும்  பீட்சா டெலிவரி செய்ய வந்த பரமேஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காயத்ரி ராவின்  செல்போன் எண்ணை ஆபாச வாட்ஸ்-அப் குழுவில் பரமேஸ்வரன் பதிவிட்டுள்ளார். இதனால் காயத்ரி ராவை பலரும் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காயத்ரி ராவ்  புகார் அளித்திருந்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவான பரமேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்