"வானம் கொட்டட்டும்" படத்தின் டிரைலர் வெளியீடு - மணிரத்னம், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பு

மணிரத்னம் தயாரித்துள்ள "வானம் கொட்டட்டும்" படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
வானம் கொட்டட்டும் படத்தின் டிரைலர் வெளியீடு - மணிரத்னம், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பு
x
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கத்தில் உருவாகியுள்ளது ' வானம் கொட்டட்டும்' படம். இதன் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், மடோனா செபஸ்தின், ராதிகா சரத்குமார், சுஹாசினி, பாடகர் சித் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 'வானம் கொட்டட்டும்' படத்தின் மூலம்  இசை அமைப்பாளராக அறிமுகமாகியுள்ள பாடகர் சித் ஸ்ரீராம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை மேடையில் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த மேடையில் நிற்பது பெருமையாக உள்ளதாக குறிப்பிட்ட நடிகர் சரத்குமார்,  நீண்ட நாட்களுக்கு பிறகு ராதிகாவுடன் இணைந்து நடித்துள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்