பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா விவகாரம் : வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவு

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா விவகாரம் : வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவு
x
சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில், இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒலிப்பதிவு அரங்கு இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த இடத்தை காலி செய்யும்படி, ஸ்டுடியோ நிர்வாகம், இளையராஜாவுக்கு வலியுறுத்தியது. இதை எதிர்த்தும், தம்மை வெளியேற்ற தடை விதிக்க கோரியும் இளையராஜா சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால், தனக்கு பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வழக்கை விரைந்து முடிக்கும்படி, உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி, இளையராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்