பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்
பதிவு : நவம்பர் 27, 2019, 10:29 AM
பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங், உடல்நலக்குறைவால், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படத்தின் மூலம் பாலாசிங் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்தியன், புதுக்கோட்டை, விருமாண்டி, எல்.கே.ஜி, மகாமுனி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில், குணசித்திர, வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில்  பாலாசிங்க நடித்துள்ளார். நாடக கலைஞரான அவர், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 67 வயதாகும் அவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலாசிங்கை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில், அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பின்னர், அவரது சொந்த ஊரான நாகர்கோவிலிலுக்கு உடல் எடுத்து செல்லப்பட உள்ளது. பாலாசிங்கின் மரணம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

37 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

"மக்கள் நேரடியாக தங்களிடம் புகார் தெரிவிக்கலாம்" - காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி அறிவிப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.

116 views

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : "துணை நிற்போம்" - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தானாக முன்வந்து விசாரணையை துவக்கி உள்ளது.

132 views

தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார் - காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

கடலூரில் தடுப்பூசி போட்டதால் 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

10 views

துணை ராணுவப் படையில் 3-ம் பாலினத்தவர் : கருத்து கேட்கிறது மத்திய அரசு

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி நாட்டில் நான்கு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

216 views

சீன செயலிகளுக்கு தடை விதித்தது டிஜிட்டல் ஸ்டிரைக் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

86 views

குறித்த நேரத்தில் ரயில்களை இயக்கி ரயில்வே சாதனை - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெருமிதம்

நாடு முழுவதும் பொது முடக்கம், தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், இந்திய ரயில்வே அனைத்து ரயில்களையும் சரியான நேரத்தில் இயக்கும் தனித்துவமான சாதனையை நேற்றைய தினம் படைத்துள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.