பாபாஜி ஆசிரமத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த் - சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் பாபாஜி குகை பகுதியில், தமது சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.
பாபாஜி ஆசிரமத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த் - சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ
x
உத்தரகாண்ட் மாநிலம் பாபாஜி குகை பகுதியில், தமது சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். இமயமலைக்கு 10 நாள் ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலம் துவாராகாட் நகரில் உள்ள பாபாஜி குகை பகுதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்நிலையில்,  பாபாஜி குகையின் அருகே தமது சொந்த செலவில் அமைத்த ஆசிரமத்தை, இன்று அவர் பார்வையிட்டார். இதுதொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்