தீபாவளிக்கு முன்பு திரைக்கு வரும் 10 படங்கள்
பதிவு : செப்டம்பர் 07, 2019, 08:35 PM
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தீபாவளிக்கு முன்பு வெளியாகும் 10 பெரிய பட்ஜெட் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யாவின் மகாமுனி, தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா, யோகிபாபுவின் ஜாம்பி ஆகிய 3 படங்களும் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா பண பிரச்சினையில் சிக்கி நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகிறது. 

ஜாம்பி ரத்த காட்டேறிகளை பற்றிய நகைச்சுவை படம். சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படமும் வெளியானது.

சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள காப்பான் படம் 20-ந்தேதி வெளியாகிறது. கே.வி.ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் சூர்யா அதிரடிப்படை போலீஸ் அதிகாரியாக வருகிறார். 

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை 27-ந்தேதி வெளியாகிறது.

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் அசுரன், ஜி.வி.பிரகாசின் 100 பர்சன்ட் காதல் ஆகிய படங்களை அடுத்த மாதம் 4-ந்தேதியும், விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் படத்தை 10-ந்தேதியும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.


பிற செய்திகள்

அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

781 views

வைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.

48 views

இன்று "கவிப்பேரரசு" வைரமுத்து பிறந்தநாள்

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று.

331 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

395 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

531 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.