ரஜினியை தலைவராக்க துடிக்கிறதா டெல்லி தலைமை ?
பதிவு : செப்டம்பர் 04, 2019, 07:04 AM
தமிழக பா.ஜ.க. தலைவராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டபோதிலும், எப்போது நடிகர் ரஜினி கட்சி தொடங்குவார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அந்தநாளுக்காக ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே, அவ்வப்போது பொதுவெளியில் ரஜினி பேசும் பேச்சுகள் யாவும், குறிப்பாக பாஜக மீது அவருக்கு சார்பு நிலைப்பாடு இருப்பதையே காட்டுகிறது.

இதேபோல், தமிழகம் வந்தபோது, ரஜினியின் வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்துப் பேசினார் மோடி. இருவருக்கும் உள்ள நெருக்கம் அரசியல் வட்டாரம் அறிந்ததே. 2019 ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றபோது அவருக்கு வாழ்த்து கூறிய ரஜினி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் வரிசையில் சக்திவாய்ந்த தலைவர் மோடி என்று புகழாரம் சூட்டினார். பதவியேற்பு விழாவிலும் கலந்துகொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஒருமுறை, யார் பலசாலி என்ற கேள்விக்கு 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால், அவர்தான் பலசாலி என்று கூறி, மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே தெரிவித்தார். சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை மனதார வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜூனன் போன்றவர்கள்" என்று பாராட்டி பேசியிருந்தார்.  இதனால் பா.ஜ.க. அரசு மீதான ஆதரவு நிலைப்பாட்டில் ரஜினிகாந்த் வெளிப்படையாக இருப்பது தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே ரஜினிகாந்த் புது கட்சி தொடங்குவாரா?, அல்லது பா.ஜ.க.வில் தலைமைப் பொறுப்பை ஏற்று இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு அடுத்து யாரை நியமிப்பது என்று கட்சி மேலிடம் பரிசீலித்து வருவதாகவும், மூத்த தலைவர்களில் சிலர் இந்த பதவியை பெறுவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. தலைவராக நடிகர் ரஜினிகாந்தை நியமித்தால் எப்படி இருக்கும்? என்று டெல்லியில் உள்ள பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் மறைவுக்கு பிறகு, எப்படியும் தமிழகத்தில் காலூன்றிவிட வேண்டும் என்று பா.ஜ.க. தீவிரமாக இருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே ரஜினிகாந்தை தலைவராக நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடமும் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசியிருப்பதாக தெரிகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியைப் பின் தொடரும் பாஜகவின் முயற்சி பலனளிக்குமா? தாமரை மலர்ந்தே தீரும் என்று நம்பிக்கை வார்த்தைகளை எப்போதும் உச்சரித்துவந்த தமிழிசை இல்லாதது பாஜகவுக்கு பலவீனமா ?

தமிழகத்தில் எப்படியும் காலூன்றிவிட வேண்டும் என்று துடிக்கும் பாஜகவின் வியூகம் என்ன ? அடுத்ததாக பாஜக தலைவர் பொறுப்புக்கு யாரை அறிவிக்கப் போகிறார்கள்? என்று அரசியல் அரங்கம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

பிற செய்திகள்

"எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு - செப். 23 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு"

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் விசாரணை வருகிற 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

1 views

"குடிநீரை சேமிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : ஏரி,குளங்களை தூர்வார நடவடிக்கை"

வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கக்கூடிய நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

4 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

52 views

"ஒரே நாடு , ஒரே மொழி கொள்கை நிறைவேறாது" - வைகோ

"இந்தியாவை சர்வாதிகார நாடாக்க முயற்சி செய்கிறார்கள்"

11 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

23 views

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.