திமுக தலைவர் ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு
பதிவு : செப்டம்பர் 02, 2019, 03:58 PM
சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்த நிகழ்வு இரு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்த நிகழ்வு இரு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த கருணாநிதியின் மகள் செல்வி- செல்வம் தம்பதியின் மகள் வழி பேத்திக்கு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்த நிலையில், துரைமுருகன் உள்ளிட்டோர் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த சந்திப்பு, திமுக மற்றும் விஜய் தரப்பினரிடையே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3320 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

293 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

289 views

பிற செய்திகள்

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

1 views

தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார்.

1 views

"கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை" - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

11 views

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

35 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

639 views

பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.