வீட்டின் அருகே வந்து அறிவு புகட்டிய வீதி நாடகம் - சினிமாவின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் நலிவு

கலாச்சாரத்தை கடத்துதல் கருத்து பரவல் மாற்றுச் சிந்தனை விதைப்பு என வலம் வந்த வீதி மற்றும் நீதி நாடக கலைஞர்களின் வேலையிழப்பு குறித்து ஒரு சீரிய பார்வை.
வீட்டின் அருகே வந்து அறிவு புகட்டிய வீதி நாடகம் - சினிமாவின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் நலிவு
x
திரைப்படம் வராத காலத்தில், தெருவின் முனை வரை வந்து நம்மை மகிழ்வித்து, நாட்டின் நிலையையும், மக்களின் வாழ்வையும் புரிய வைத்தது நாடகம்தான். வீதி நாடகம், நீதி நாடகம், புராண, இதிகாச நாடகங்கள் என பல்வேறு வடிவங்களில் வேடம் கட்டிய கலைஞர்கள் உலா வந்தனர்.

திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் களைகட்டிய நாடகங்கள், கால ஓட்டத்தில் மறைந்தன. இதனால், தன்னை உயிர்ப்புடன் வைக்க, பஃபூன் மூலம், அவ்வப்போது, இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்றன. அதுவும் செல்லுபடி ஆகாத நிலையில், சினிமா பாடலுக்கு ஆடுவது அரங்கேறியது. கோயில் நிகழ்ச்சி வரை ஆபாச நடனம் வந்தது ஆதரவை பெருக்கினாலும், முகம் சுளிக்கும் வகையில் இருந்ததால் எதிர்ப்பு வலுத்து சர்ச்சை ஏற்படுத்தியது. இதை தமிழக அரசு ரத்து செய்ய, நீதிமன்றம் வந்து சேர்ந்தது வழக்கு.


ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க போலீசாருக்கு, நீதிமன்றம் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவ்வாறு நேரடியாக உத்தரவிட முடியாது என்று மறுத்துவிட்டது. நிகழ்ச்சிக்கு 2 வாரங்கள் முன்னர், காவல்துறையிடம் அனுமதி கோருமாறு அறிவுறுத்திய நீதிமன்றம், போலீசார் மறுத்தால் நீதிமன்றத்தை நாடுமாறு கூறியுள்ளது. ஆபாசம் தவிர்த்து, சுவைபட மேடை ஏறினால், கலைஞர்களின் வாழ்வு செழிக்கும் என்பதில் ஐயமில்லை.

Next Story

மேலும் செய்திகள்