மாநாடு படத்திலிருந்து நடிகர் சிம்பு விடுவிப்பு
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 01:06 AM
மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விடுவிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விடுவிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மாநாடு படத்திற்கான கால்ஷீட் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், படம் எடுப்பதில் கால விரயம் ஏற்படுவதாக தெரிவித்த சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தை கைவிடுவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் காலம் மற்றும் பொருளாதாரம்  ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த  முடிவினை தான் ஏற்றுக் கொள்வதாகவும்  இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.