உதவி இயக்குநர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு - பேரரசு
உதவி இயக்குநர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதே தமது முதல் பணி என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
திரைத்துறை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் உள்ளே வருகிற சில தயாரிப்பாளர்களால் உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காமல் போய் விடுகிறது என்று வருத்தம் தெரிவித்த பேரரசு, இதற்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என்று கூறினார். சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு புதிய இயக்குநர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள பேரரசு, இயக்குனர்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டதே இயக்குனர்களின் தொழில் பாதுகாப்புக்காக தான் என்றார்.
Next Story