"கடாரம் கொண்டான்" படத்திற்கு மலேசியாவில் தடை

நடிகர் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடாரம் கொண்டான் படத்திற்கு மலேசியாவில் தடை
x
நடிகர் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே, வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்க  அந்நாட்டு தணிக்கை குழு மறுத்துள்ளது. மலேசிய காவலர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது. இதனால் மலேசியாவில் கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்