தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் தேர்தல் தொடர்பான வழக்குகள் - வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
பதிவு : ஜூலை 17, 2019, 01:17 AM
தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும், ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு  நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது,  விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக, பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வெவ்வேறு நீதிபதிகள் முன்பு நிலுவையில் உள்ளதால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற, நீதிபதி ஆதிகேசவலு,  தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

பிற செய்திகள்

இந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்

ஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.

671 views

நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

47 views

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" என பெயரிடப்பட்டுள்ளது.

110 views

மோடி வாழ்க்கை வரலாறு - புதிய படம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், புதிய படம் ஒன்று தயாராக உள்ளது.

9 views

தீபாவளி நாளில் உறுதியாக திரைக்கு வரும் "பிகில்"...

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி நாள் வெளியாவதை உறுதி செய்தியுள்ளது.

27 views

பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு விருது

பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும், அவர் நடித்த தி லாஸ்ட் கலர் படத்திற்கு, சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.