பாக்யராஜின் முன்னாள் ஒப்பனை கலைஞர் மரணம்
பதிவு : ஜூன் 18, 2019, 02:40 PM
திரைப்பட நடிகர் பாக்யராஜிடம் ஒப்பனை கலைஞராக இருந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் நேருஜி நகரில், உள்ள ரெயில்வே மேம்பால கம்பியில் தூக்கு போட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சடலமாக தொங்கியவரின் பேண்ட் பாக்கெட்டில் செல்போன் இருந்ததை தொடர்ந்து அதை கொண்டு விசாரித்ததில், அவர் தேனி மாவட்டம் போடி ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் சினிமா நடிகர்களுக்கு ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும், ஏற்கனவே நடிகர் பாக்யராஜூக்கு ஒப்பனை கலைஞராக இருந்தவர் என்பதும் தெரியவந்தது. சமீபத்தில் தான் அவரின் மகனுக்கு திருமணம் முடிந்துள்ளது. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

776 views

பிற செய்திகள்

சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப்படம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19 ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

17 views

பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படை தன்மையே இருக்காது என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் தெரிவித்தார்.

24 views

மாங்கனி திருவிழா கோலாகலம் : போட்டி போட்டுக்கொண்டு மாம்பழங்களை பிடித்த பொதுமக்கள்

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

9 views

சொத்து பிரச்சினையால் பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

பெற்ற தாயையே, தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நடந்துள்ளது.

29 views

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் : கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சம்...

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காரணமாக கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

27 views

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.