நடிகர் சங்க தேர்தல் : தபால் மூலம் வாக்குகளை செலுத்த 22ஆம் தேதி கடைசி நாள்
பதிவு : ஜூன் 16, 2019, 05:31 PM
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை ஆர். ஏ. புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது.
தென்னிந்திய  நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை ஆர். ஏ. புரத்தில்  உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், தபால் வாக்கு சீட்டுகளை அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. தபால் வாக்குகளை பதிவு செய்ய விரும்புவோர், அளித்த தகவல் அடிப்படையில் அவர்களுக்கு இந்த வாக்குச்சீட்டுகள் இன்று மாலைக்குள் அனுப்பப்பட உள்ளன. அதன்படி, சுமார் 1000 நாடக நடிகர்களுக்கு தபால்வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட உள்ளது.  நடிகர் சங்க தேர்தலில், தபால் மூலம் வாக்குகளை செலுத்த 22ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.