ராஜராஜசோழன் குறித்து சர்ச்சை கருத்து : முன் ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு தாக்கல்
பதிவு : ஜூன் 12, 2019, 09:34 PM
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் சர்ச்சைக்குரிய  வகையில் பேசியது தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது, திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித் சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தான் ராஜராஜ சோழன் வரலாற்று உண்மைகளை மட்டுமே கூறியதாக குறிப்பிட்டுள்ள இயக்குநர் ரஞ்சித், பல்வேறு வரலாற்று புத்தகங்களில் குறிப்பிட்டு தகவல்களையே தானும் கூறியுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.