"கைபேசிக்கும் தரும் மரியாதையாவது பெற்ற தாய்க்கு தர வேண்டும்" - நடிகர் ராகவா லாரான்ஸ்
பதிவு : மே 12, 2019, 05:54 PM
பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடுபவர்களுக்கு எதிராக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
அன்னையர் தினத்தையொட்டி, சென்னை வடபழனியில் தாய்மையை கெளரவிக்கும் விதமாக தாய் என்ற அமைப்பை அவர் தொடங்கி வைத்து, தாய் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைபேசிக்கும் தரும் மரியாதையாவது பெற்ற தாய்க்கு தர வேண்டும் என்று கூறினார்.  இப்போது படித்து,  கை நிறைய சம்பாதிக்கும் பிள்ளைகளே தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவதை சுட்டிக்காட்டிய அவர், அவர்களை  கொலை குற்றம் செய்தவர்களாக கருதி தண்டனை அளித்தால் கூட தப்பில்லை என்று தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.