ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ஓர் அலசல்...
பதிவு : ஏப்ரல் 20, 2019, 12:12 PM
சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டராக ஜொலிக்கும் நடிகர் ரஜினி கடந்த, 1991ம் ஆண்டு அதிமுக மீது முதல் எதிர்ப்பை பதிவு செய்து அரசியலுக்கு அச்சாரமிட்டார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 1992ம் ஆண்டு அவர் நடித்த "அண்ணாமலை" திரைப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசினார். தொடர்ந்து, திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை பேசி வந்த ரஜினி, 1995-ம் ஆண்டு நேரடியாகவே பேச ஆரம்பித்தார். அவரது முதல் அரசியல் நேரடி பேச்சு, "தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம்" என கொளுத்திப் போட்டதுதான். 

தொடர்ந்து 1996ம்ஆண்டு "ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என ரஜினி அடுத்தடுத்து அதிரடி காட்டினார். 1998ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர், நேரடியாக தனது ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தார். ஆனால், 2001ம்ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாய்ஸ் எதுவும் கொடுக்காமல் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2002 -ம் ஆண்டு ரஜினிக்கு எதிராக பாமக போர்க்கொடி தூக்கியது அவரை அதிகமாக பாதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ரசிகர்கள், 2004 -ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாமகவுக்கு எதிராக களமிறங்கினர்.

அப்போது, ரஜினி, " தைரியலட்சுமி" என ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, 2008 -ம் ஆண்டு காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்தார். தொடர்ந்து, 2014ம் ஆண்டு  மோடி, ஒரு சிறந்த தலைவர்" என ரஜினி பாராட்டி மீண்டும் தனது அரசியல் கருத்தை பதிவு செய்தார். 2017 -ம் ஆண்டு போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 31 - ல் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டினார். இப்போது, சட்டப்பேரவை தேர்தல்  எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

443 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5435 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6406 views

பிற செய்திகள்

நயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜூன் 14ல் ரிலீஸ் ஆகிறது

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

25 views

புதிய படத்தில் விஜய் தாதா

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.

2074 views

"என்.ஜி.கே" பாடலின் புதிய சாதனை

NGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

959 views

எஸ்.ஜே.சூர்யா படத்திற்கு சிக்கல்

எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

742 views

தனது தாய் தந்தையை நடிகர் நாசர் கண்டு கொள்வதில்லை - அயூப், நடிகர் நாசரின் சகோதரர்

நடிகர் நாசர், தனது தாய், தந்தையை பார்த்து கொள்ளாமல் இருப்பதாக அவரது சகோதரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

390 views

72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா சிம்பிலான உடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் மிகவும் அழகாக காட்சி அளித்தார்.

339 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.