தனியார் தங்கும் விடுதியில் வாடகை பாக்கி : நடிகை வாக்குவாதம் - நள்ளிரவில் பரபரப்பு

நாகர்கோவிலில் உள்ள தனியார் தங்கும் விடுதியொன்றில் நடிகை நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் தங்கும் விடுதியில் வாடகை பாக்கி : நடிகை வாக்குவாதம் - நள்ளிரவில் பரபரப்பு
x
மலையாள படக்குழுவினர் நாகர்கோவில்  செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டனர். இரவு தங்கும் விடுதிக்கு திரும்பிய நடிகை  மஞ்சு சவேர்கர் தனது அறையில் அழுக்காக உள்ள தலையணை உறை  மாற்றப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.  அதற்கு விடுதி ஊழியர்கள் சரிவர பதிலளிக்காததால் விடுதியை காலி செய்வதாக நடிகை கூறியுள்ளார். 

60 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்திவிட்டு போகுமாறு ஊழியர்கள் கூறியதால் அதிருப்தி அடைந்த நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். படக்குழுவினர் வாடகை பாக்கியை செலுத்த ஒப்பு கொண்டதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. 


Next Story

மேலும் செய்திகள்