ரஜினியின் ஆஸ்தான மேக்அப் மேன் முத்தப்பா காலமானார் : நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி

நடிகர் ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா தனது 89வது வயதில் காலமானார்.
ரஜினியின் ஆஸ்தான மேக்அப் மேன் முத்தப்பா காலமானார் : நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி
x
நடிகர் ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா தனது 89வது வயதில் காலமானார். தமிழின் மூத்த தயாரிப்பாளரான மறைந்த ஏவி.மெய்யப்ப செட்டியாரால் மேக்-அப் மேனாக வாழ்க்கையை துவங்கியவர் முத்தப்பா. 'பராசக்தி' படத்தில் சிவாஜி கணேசனுக்கு முதன் முதலாக ஒப்பனை செய்த இவர், கமலஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா' உள்பட பல படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றினார். ஒரு கட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கினார். அத்துடன் ரஜினியுடன் சில படங்களிலும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை காலமான அவரது உடலுக்கு, நடிகர் ரஜினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்