"எம்.பி.,எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது?" - விஷால்

புதிதாக ஒரு டிவி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்.பி.,எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? - விஷால்
x
தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய டிவி சேனல் ஒன்றை உருவாக்க, எக்கச்சக்கமான பணம் தேவை என்று கூறப்படும் நிலையில், மாத சம்பளம் வாங்கும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களால் எப்படி ஒரு செய்தி சேனலை உருவாக்க முடிகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது பதிவின் முடிவில், 2019-ஆம் ஆண்டிற்காக காத்திருப்பதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்