அட்லி, ரஹ்மானுடன் கைக்கோர்க்கும் விஜய்

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 63வது படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் பூஜையுடன் தொடங்கியுள்ளார்.
அட்லி, ரஹ்மானுடன் கைக்கோர்க்கும் விஜய்
x
சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 63வது படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் பூஜையுடன் தொடங்கியுள்ளார். மெர்சல் படத்திற்கு பிறகு, விஜய், அட்லி, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவரும்  இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனனர். பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மெர்சல், சர்கார் என இரண்டு திரைப்படங்களுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த புதிய திரைப்படம், திரில்லர் கதைக்களத்தை மையமாக கொண்டதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்