செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை தட்டி விட்டது ஏன்? - நடிகர் சிவக்குமார் விளக்கம்
பதிவு : அக்டோபர் 30, 2018, 07:51 AM
செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
செல்பி எடுப்பது அவரவர் சொந்த விஷயம் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் இடங்களில் எப்படி வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்து கொள்ளுங்கள் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஆனால் பொது இடங்களில் நடைபெறும் விழாவில் பங்கேற்க செல்லும் போது பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை ஓரம் தள்ளிவிட்டு  செல்பி எடுக்கிறேன் என்று பலர், நடக்க விட  முடியாமல் செய்வது,  நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களில் புகைப்படம் எடுத்து கொண்டதை குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், தானும் ஒரு மனிதன் தான். தனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.