நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை

மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை
x
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு காவ்யா மாதவனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை திலீப், தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் திலீப்புக்கு முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியார் மூலம் 'மீனாட்சி' என்ற பெண் குழந்தை ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்