மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு: நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்
பதிவு : அக்டோபர் 08, 2018, 04:06 PM
மத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவான வழக்கில், இயக்குநர் சந்திரசேகருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய, நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், 'திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை லஞ்சம் கொடுப்பது' என விமர்சித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக, எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்திர சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, அவருக்கு  முன்ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டுள்ளார்.


"3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" - போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இதற்கிடையே, எஸ்.ஏ.சந்திர சேகருக்கு எதிராக இந்து முன்னணி சார்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், சந்திரசேகர் மீதான வழக்கை  விரைவாக விசாரித்து, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பேட்மிண்டன் விளையாட்டில் நடிகர் விஜய் மகள்

நடிகர் விஜய் மகள் திவ்யா சாஷா, பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையாக உருவாகியுள்ளார்.

3554 views

"விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்" - டுவிட்டர் பதிவில் கமல்ஹாசன் கருத்து

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுப்பிய கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

940 views

கமல். ரஜினி வழியில் அரசியலுக்கு வருகிறாரா விஜய்...?

கமல், ரஜினியை தொடர்ந்து அரசியல் களத்தில் இறங்குவாரா விஜய்..?? அவரது செயல்பாடுகள் குறித்து ஒரு செய்தித் தொகுப்பு

1056 views

சென்னையில் சுழலும் விஜய் படக்குழு

சென்னையில் சுழலும் விஜய் படக்குழு..

52 views

பிற செய்திகள்

எல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

108 views

சி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

4 views

சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா

சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

18 views

மு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

17 views

சுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

19 views

8 வழி சாலைக்காக ஆட்சேபனை கூட்டம் - கருப்பு கொடியுடன் வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 8 வழி சாலைக்காக ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.