மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

லண்டனில் நடைபெற்ற ஐ.ஏ.ஆர்.ஏ சர்வதேச விருது வழங்கும் விழாவில், சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதிற்கு நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு
x
லண்டனில் நடைபெற்ற ஐ.ஏ.ஆர்.ஏ சர்வதேச விருது வழங்கும் விழாவில், சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதிற்கு நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தில்  தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் விஜய்  ஐ.ஏ.ஆர்.ஏ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.நடிகா் விஜயை தவிர்த்து, இந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களான ஜோஷிவா ஜாக்சன், கென்னத் ஓகோலி, டாய்ம் ஹாசன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில்,ஐ.ஏ.ஆர்.ஏ அமைப்பின் சார்பாக நேற்று இரவு 8 மணி அளவில் நடைபெற்ற இந்த விழாவில், சிறந்த சர்வதேச நடிகருக்கான விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு, வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்