திருமணம் செய்ய மறுத்த நிலானி, தற்கொலை செய்து கொண்ட காதலன் - பின்னணி என்ன ?
பதிவு : செப்டம்பர் 18, 2018, 05:46 PM
மாற்றம் : செப்டம்பர் 18, 2018, 05:58 PM
திருமணம் செய்யாமலே 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த பிறகும் நடிகை நிலானி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியடைந்த உதவி இயக்குநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழில் வெளியாகி வரும் பல சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தன் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த அவருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த காந்தி லலித்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த காந்தி லலித் குமார் நடிகை நிலானியின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.. அவரின் காதலை ஏற்றுக் கொண்ட நடிகை நிலானியும் காந்தி லலித்குமாரை விரும்பியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து 2 பேரும் வளசரவாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமலே 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.நிலானியின் பிள்ளைகளை பள்ளியில் சென்று விடுவது உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் காந்தி விருப்பத்துடனே செய்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த போது நிலானிக்கு அவரது காதலனான காந்தி மெட்டி அணிவித்து அவரை தன் மனைவியாகவே மனதளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இப்படி ஒரு மனைவி தனக்கு கிடைத்தது தன் பாக்கியம் என்றும் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார் காந்தி. இருவரும் தங்கள் காதல் வாழ்க்கையின் சாட்சியாக பல புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த நிலையில் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நிலானி தெரிவித்த கருத்து சர்ச்சையாகி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு வெளியே வந்த நிலானி வழக்கம் போல சீரியல்களில் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் நிலானிக்கு மற்றொரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்து போன காந்தி லலித்குமார் நிலானியை திருமணத்திற்கு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள விரும்பாத நிலானி காந்தியை தவிர்த்து வந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். தன் காதலி தன்னை விட்டு விலகிச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத காந்தி, அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். நிலானியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத காந்தி மயிலாப்பூர் பகுதியில் ஷீட்டிங்கில் இருந்த நிலானியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் கோபமடைந்த நடிகை நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காந்தி மீது புகார் அளித்துள்ளார். காந்தியும் தானும் நட்பாக பழகியதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள காந்தி வற்புறுத்தி வருவதாகவும் அவர் புகார் அளித்ததால் மனமுடைந்து போன காந்தி பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். காந்தியின் செல்போனை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் நிலானியுடன் அவர் நெருக்கமாக இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் இருந்துள்ளது. 

இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காந்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் ஆசையாக நேசித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் தன் கனவுகளை தொலைத்த இளைஞனின் வாழ்க்கை சோகத்தின் உச்சமும் கூட...

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1180 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4561 views

பிற செய்திகள்

தவான் விலகல் - மோடி வருத்தம்...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் தவான் விலகியதற்கு மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

4 views

பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததால் பரபரப்பு...

பூந்தமல்லி அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

28 views

21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

24 views

சாலையில் கிடந்த பணம் - காவல் ஆணையரிடம் ஒப்படைத்த முதியவர்

கோவை அருகே சாலையில் கிடந்த கை பர்சை முதிவயர் ஒருவர் காவல் ஆணையரிடம் வழங்கினார்.

19 views

வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் : மேள தாளம் முழங்க புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது

கோவை வடவள்ளி முல்லை நகரில் வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

11 views

இளைஞர் தற்கொலை வழக்கில் திருப்பம் : கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது அம்பலம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மகன் இறப்பில் சந்தேகம் என தந்தை கொடுத்த புகாரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

199 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.