அரசியலில் ரஜினி, கமலுக்கு அடுத்து விஷால் - அரசியலில் நுழைவதற்கான அச்சாரமா? மக்கள் நல இயக்கம்
பதிவு : ஆகஸ்ட் 30, 2018, 07:56 AM
நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை, மக்கள் நல இயக்கமாக மாற்றியுள்ளார்.
* நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை, மக்கள் நல இயக்கமாக மாற்றியுள்ளார். அதற்கான கொடியையும் அவர் அறிமுகப்படுத்தி இருப்பது, அரசியலில் நுழைவதற்கான அச்சாரமா?

* நடிகர்கள் ரஜினி, கமல்  ஆகியோரது அரசியல் பிரவேசம் தமிழக அரசியலை மீண்டும் சினிமாவின் பக்கம் இழுப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது  வரிசையில், நடிகர் விஜய்யும், தனது படங்களில் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதுடன்,  ரசிகர் மன்றங்களையும் மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்.

* ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிரடியாய் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் விஷால்.  ஏற்கனவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் விஷால் வெற்றி வாகை சூடினார். தற்போது "இரும்புத்திரை" படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் மீண்டும் அரசியல் திரியைக் பற்ற வைத்திருக்கிறார்.

* மேலும், தனது நற்பணி மன்றங்களை எல்லாம் மக்கள் நல இயக்கங்களாக மாற்றி அறிவித்து அனைவரது புருவங்களையும் உயரச் செய்துள்ளார். அது மட்டுமின்றி இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தியது, கட்சி தொடங்குவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

* தமிழக அரசியலில் ஏற்கனவே உள்ள ஜாம்பவான்கள் மத்தியில் பொறுத்திருந்து பார்க்கலாம் அரசியலில் விஷாலின் காய் நகர்த்தல்கள் எப்படி இருக்கப் போகிறது என்று!

தொடர்புடைய செய்திகள்

தமிழர்களை விஷால் ஆள நினைக்கக் கூடாது - சீமான்

தன்னை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கு நடிகர் விஷால் தொண்டாற்றலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

1799 views

"மக்கள் நல இயக்கம்", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால்

எப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன்

355 views

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்..?

"திருப்பரங்குன்றத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளது" - படவிழாவில் நடிகர் விஷால் பேச்சு

296 views

நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

224 views

பிற செய்திகள்

கருணாஸ் மீது நடவடிக்கை என்ன? - தமிழிசை கேள்வி

போலீசாரை மிரட்டும் தோனியில் கருணாஸ் பேசியதை எதிர்க்காத‌து ஏன் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 views

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள, கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.

201 views

தமிழக அரசு குறித்து ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி

தமிழக அரசு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தவறான பிரசாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

22 views

நானும் ஸ்டாலினும் சந்தித்தது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் - தம்பிதுரை

திமுக தலைவர் ஸ்டாலினும் தானும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

14 views

எம்.பிக்கள்,எம் .எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்...

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

56 views

கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு...

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.