பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள்...
பதிவு : ஆகஸ்ட் 24, 2018, 09:18 AM
பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
* விளையாட்டில் பெண்கள் எட்டிய உயரம் என்பது உலகறிந்தது தான். விளையாட்டு வீராங்கனைகளை மையமாக கொண்டு வெளியான படங்களும் ஏராளம். தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் வெளியான படங்களின் வெற்றியே அதற்கு சாட்சி... 

* இந்தியில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சக்தே இந்தியா படம் பெண்கள் ஹாக்கி பற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தது... தேசிய விளையாட்டான ஹாக்கியை விளையாடும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசிய படம் அது.. ஷாரூக்கான் பயிற்சியாளராக நடித்த இந்த படத்தில் பெண்கள் ஹாக்கி அணி கோப்பையை எப்படி கைப்பற்றியது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருப்பார்கள்... 

* இதேபோல் 2016ல்  அமீர்கான் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் தங்கல். திறமை இருந்தும் சாதிக்க முடியாத ஒரு மல்யுத்த வீரன், தன் பெண்களை எப்படி மல்யுத்த வீரன் ஆக்குகிறார் என்பதை கதைக் கருவாக கொண்டு வந்த படம் .

* ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வந்த படம்... குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமாக பிரியங்கா சோப்ரா நடித்த இந்த படமும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

* மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான கரிங்குன்னம் சிக்சஸ் படம் வாலிபால் பற்றிய கதையம்சம் கொண்டது. வாலிபால் பயிற்சியாளராக மஞ்சு வாரியர் நடித்த இந்த படம் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்றது. 

* மற்ற மொழிகளை விடவும் தமிழில் விளையாட்டு சார்ந்து வெளியான படங்கள் ஏராளம்.ஓட்டப்பந்தயத்தில் சாதிக்கும் ஒரு ஏழை பெண்ணின் வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய படம்  எதிர் நீச்சல்.விளையாட்டில் உள்ள அரசியலால் ஒரு வீராங்கனையின் கனவு எப்படி சிதைந்து போகிறது என்பதை விரிவாக பேசிய படமும் இது.

*ஒரு மீனவ குடும்பத்தை சேர்ந்த பெண் குத்துச்சண்டையில் உலக சாதனையை எப்படி எட்டிப் பிடிக்கிறார் என்பதை காட்டிய படம் இறுதிச் சுற்று. பயிற்சியாளராக மாதவன், குத்துச்சண்டை வீராங்கனையாக ரித்திகா சிங் நடித்த இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

*இந்த வரிசையில் கிரிக்கெட் விளையாடும் பெண்கள் குறித்து பேச இருக்கிறது கனா என்ற படம்.. கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எதிர்கொள்ளும் சவால்கள், சாதனைகளை பற்றி பேச இருக்கிறது இந்த படம்... படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது - டி. ராஜா

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்கமுடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

115 views

மதுரை பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு சிலை...

மதுரையின் தனி சிறப்பு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

573 views

சுற்றுலாப் பயணிகளை கவரும் குரங்குகளின் சேட்டை...

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கூட்டமாக வந்த லங்கூர் குரங்குகள் செய்த சேட்டை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.

158 views

பிற செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - நடிகை கவுதமி பங்கேற்பு

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை கவுதமி பங்கேற்றார்.

0 views

வேகமாக பரவிய சமந்தாவின் புகைப்படம் - ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு

கணவர் நாக சைதன்யா எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2861 views

50வது பிறந்தநாளை வினோதமாக கொண்டாடிய நடிகர் வில் ஸ்மித்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது 50வது பிறந்தநாளை ஹெலிகாப்டரிலிருந்து குதித்து கொண்டாடினார்.

14 views

படமாகிறது, 'இஸ்ரோ' விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை : விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார், நடிகர் மாதவன்

இஸ்ரோ' விஞ்ஞானியான நம்பி நாரயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

69 views

நடிகை ராதிகாவுக்கு மகளிர் ஆளுமை விருது

நடிகை ராதிகா, தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி உள்பட 12 சிறந்த பெண்மணிகளுக்கு, மகளிர் ஆளுமை விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

28 views

நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி -தாக்குதலுக்கு ஆளானார்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர், தாக்குதலுக்கு ஆளானார்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.