"இளையராஜா - வைரமுத்து மீண்டும் இணைய வேண்டும்!"

ராஜபாட்டை நிகழ்ச்சியை பார்த்த விசிக பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் வேண்டுகோள்
இளையராஜா - வைரமுத்து மீண்டும் இணைய வேண்டும்!
x
தந்தி தொலைக்காட்சியின் ராஜபாட்டை நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, தனது வாழ்க்கை பயணத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பேசினார்.  நிகழச்சி ஒளிபரப்பிற்கு பின் விசிக பொதுச்செயலாளர் மற்றும் எழுத்தாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவு :


“நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் கவிஞர் வைரமுத்துவின் நேர்காணலைப் பார்த்தேன். இசைஞானி இளையராஜா குறித்த கேள்விகள் பலவற்றுக்குப் பதிலளிக்காமல்  சிரித்தபடி தவிர்த்துவிட்டார். 

இளையராஜாவின் பல நல்ல டியூன்கள் கவிஞர் வைரமுத்து எழுதாததால்   வீணாகிவிட்டன என்பது என் அபிப்ராயம். அதுபோலத்தான் அவரது அற்புதமான வரிகளும் இளையராஜாவின் டியூன் இல்லாமல் பாழாகிப்போயிருக்கின்றன. 

தாரை தப்பட்டை படத்தில் இளையராஜாவே எழுதியுள்ள ‘ இடரினும்’ என்ற டியூனுக்கான பாடலை மட்டுமல்ல அந்தப் படத்தின் மற்ற பாடல்களையும்  வைரமுத்து எழுதியிருந்தால் அந்தப் படம் பாடல்களுக்காகவே ஓடி  வெற்றிப் படமாக மாறியிருக்கும். 

தமிழ்ச் சினிமாவில்  இருக்கும் மகத்தான இசைக்கலைஞர் இளையராஜா. அவரது செருக்கைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர் காலத்துக்குப் பொருந்தாத இசையமைப்பாளர் என புறக்கணிக்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் கவிஞர் வைரமுத்துவோடு மீண்டும் இணைந்து பணியாற்ற சம்மதிக்கவேண்டும். அவர்மீது பித்துகொண்ட ஒரு ரசிகனாக நான் முன்வைக்கும் வேண்டுகோள் இது!”



Next Story

மேலும் செய்திகள்