வில்லியாக நடித்து அசத்திய நடிகைகள்
பதிவு : ஜூன் 13, 2018, 04:57 PM
மாற்றம் : ஜூன் 19, 2018, 08:15 PM
கொடூர வில்லியாக நடித்து முத்திரை பதித்த நடிகைகளின் திரையுலக பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
அரிதிலும், அரிதாக, நடிகைகள் வில்லியாக நடித்து, அந்த திரைப்படம் வெற்றி பெற்று விடுவதுண்டு. அவ்வப்போது, தமிழ்த் திரையுலகை, வில்லிகள் கலக்கியிருக்கின்றனர்... 

இந்த வரிசையில், தற்போது வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். `சண்டக்கோழி 2' படத்தில் வில்லியாக அவர், நடித்திருக்கிறார். படத்தின் டீஸரில் காரிலிருந்து இறங்கி, ஆக்ரோஷமாகப் பார்க்கும் காட்சிகள் இவரது கேரக்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. 

நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு அமைந்து, நடிப்பில் அசத்த இடம் கிடைத்தால், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் தான்... தமிழ்த் திரையுலகை புரட்டிப் போட்ட வில்லிகள் ஏராளம்... 

1954ம் ஆண்டில், வெளியான 'மனோகரா'வில் வில்லியாக நடித்த வசந்தசேனை கதா பாத்திரம் கதாநாயகிகளும் பெற முடியாத புகழை, டி.ஆர்.ராஜகுமாரிக்குப் பெற்றுத் தந்தது. 

தற்போதைய கால கட்டத்தில், வில்லி என்றாலே ஞாபகத்துக்கு வருவது நீலாம்பரியாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு படையப்பாவில், ரம்யா கிருஷ்ணனின் நடிப்பும், வசனங்களும் அருமையாக அமைந்தது. 

தனுஷ் நடித்த `மாப்பிள்ளை' படத்தில் மனிஷா கொய்ராலா மிரட்டினார். காதல் கதையில் நடித்து வந்த கதாநாயகி மனீஷா, பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.  

கதாநாயகியாக அறிமுகமான மும்தாஜ், துணை நடிகையாக நடித்து வந்தார். பின், கவர்ச்சியான வேடங்களிலும், ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்த மும்தாஜ், வில்லியாக மிரட்டிய படம், `ராஜாதி ராஜா'. 

காதல் கதாபாத்திரங்களிலேயே நடித்த ஜோதிகா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், வேற ஸ்டைலில் இருந்தார். 

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவந்த சிம்ரன், ஐந்தாம் படையில், வில்லியாக மிரட்டினார்.  
 
எல்லோருக்கும் சில படங்கள் நடித்த பின்புதான் நெகட்டிவ் ரோல் கிடைக்கும். ஆனால், தமன்னாவுக்கு முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோல்தான். கேடி படம் மூலம், வில்லத்தனமானக் காதலால் கோலிவுட்டில் கால் பதித்தார். 

ஸ்ரேயா ரெட்டி, `திமிரு' படம் மூலம் வில்லியாகத் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது உடை, முகபாவனைகள், உடல்மொழி என அனைத்துமே அசத்தியது. 

கலர்ஃபுல் கதாபாத்திரங்களில் நடித்து, கனவுக் கன்னியாக இருக்கும் சமந்தா, `10 எண்றதுக்குள்ள' படத்தில் வில்லி அவதாரம் எடுத்தார். 

50 படங்களுக்குமேல் நடித்த த்ரிஷா கூட, கொடி படத்தில் முதல்முறையாக நெகட்டிவ் ரோலில், நடித்து அசத்தினார்.  

இதுபோன்ற வில்லத்தனமாக வேடத்திற்காக, ஒரு காலத்தில் கோலோச்சிய கதாநாயகிகள், கோலிவுட்டில் காத்துக் கிடக்கின்றனர்... 

தொடர்புடைய செய்திகள்

இரட்டை விருந்துக்கு கீர்த்தி சுரேஷ் தயார்

இரட்டை விருந்து படைக்க, நடிகை கீர்த்தி சுரேஷ் தயாராகி வருகிறார்.

1366 views

பிற செய்திகள்

'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்கு எதிர்பார்ப்பு

'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகிறது.

291 views

இயற்கை விவசாயியாக நடிக்கும் உதயநிதி

'தர்ம துரை' படத்தை அடுத்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் 'கண்ணே கலைமானே'.

37 views

பெண்கள் நடிக்கும் 'கன்னித்தீவு' : முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார்

பெண்கள் மட்டுமே நடிக்கும், 'கன்னித்தீவு' என்ற படத்தில் முக்கிய வேடத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார்.

97 views

'செல்லப்பிள்ளை' படத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக், 'செல்லப்பிள்ளை' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

25 views

கவர்ச்சியான படத்தை வெளியிட்ட ஹன்சிகா

இந்தி, தமிழ், தெலுங்கு எனக் கலக்கி வரும் நடிகை ஹன்சிகா, தமது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

3079 views

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் - தயாரிப்பாளர் சதீஷ்குமார்

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் என தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.