எண்களில் உருவாகும் தமிழ் பட பெயர்கள் - ரசிகர்களை கவர இயக்குநர்களின் புது முயற்சி

தமிழ் படங்களின் பெயர்கள், தற்போது எண்களில் உருவாகி வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்
எண்களில் உருவாகும் தமிழ் பட பெயர்கள் - ரசிகர்களை கவர இயக்குநர்களின் புது முயற்சி
x
ரசிகர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவும், எளிதாக மனதில் பதிய வேண்டும் என்ற எண்ணத்திலும்  , திரைப்படங்களுக்கு பெயர் சூட்டுவதில் இயக்குநர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
 
படங்களுக்கு பெயர் வைப்பது கூட, சீசனுக்கு ஏற்றவாறு வேறுபடுகின்றன..

ஒருகாலத்தில்  படத்தலைப்புகளில், காதல் என்ற வார்த்தை அதிக அளவில் இடம்பிடித்திருக்கும்..

தற்போது எண்களில் தலைப்பு வைக்கும் சீசன் ஏற்பட்டிருக்கிறது போல தெரிகிறது..


  ஹாலிவுட் படங்கள்  தான் பெரும்பாலும் எண்களில் தலைப்புகளை தாங்கி வரும்..

 தற்போது தமிழில் அதிக படங்கள் வெளியாகின்றன.
 
  சித்தார்த் நடித்த 180 என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 3 , சூர்யா நடிப்பில் 24 என எண்களில் திரைப்படங்கள் வெளியாகின. 

 தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் ரஜினி நடிப்பில் 2.0, விஜய் சேதுபதியின் 96, அதர்வாவின் 100, பரத் நடிப்பில் 8, ஜிவி பிரகாஷ் நடிப்பில் 4ஜி, ஓவியாவின் 90 ML, மற்றும் டி.ஆர் பாலா இயக்கத்தில் 46  என பல்வேறு படங்கள் உருவாகி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்